வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (10:01 IST)

மீண்டும் எகிறிய தங்கம் விலை: தீபாவளி பர்சேஸ் மக்களுக்கு திண்டாட்டம்!

gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 10ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 82ம் அதிகரித்துள்ளது.
 
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4690.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4700.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 37520.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 80 அதிகரித்து ரூபாய் 37600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5102.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40816.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 10ம், ஒரு சவரன் ரூபாய் 80ம் அதிகரித்து ள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.  60.50என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூபாய் 60.70 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 60700.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva