வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (08:09 IST)

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

rain
நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, கிண்டி, மாம்பலம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதாகவும் அதேபோல் மற்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னையின் ஒரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் இதனால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான அனைத்து ஏரிகளும் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Edited by Siva