Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

Written By Siva
Updated: வியாழன், 20 பிப்ரவரி 2025 (10:31 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது. நேற்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் உயர்ந்தாலும், முடிவில் மீண்டும் சரிவில் முடிந்தது. எனவே, இந்த மாதம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன், மும்பை பங்குச்சந்தை 235 புள்ளிகள் உயர்ந்து 75,704 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 22,284 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார்ஸ், சிப்லா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், இண்டஸ்‌இன்ட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், டெக் மகேந்திரா, டைட்டான், விப்ரோ, சன் பார்மா, பிரிட்டானியா, டி.சி.எஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, கோடக் மகேந்திரா வங்கி, பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

எல்லாம் காட்டு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!.. அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு..

உதயநிதியின் கேள்விக்கு விஜய் பதில் சொல்லமாட்டார்!. தீர்மானம் கொண்டுவரும் தவெக?..

Gold Price: மீண்டும் விலை ஏறிய தங்கம்!. இன்றைய அப்டேட்!..

உங்களை ஒரு தலைவன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.. உதயநிதி குறித்து குஷ்பு...

2 மணி நேரம் டாய்லெட்டில் இருந்து புரட்சி செய்தவர் உதயநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments