தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து, முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை சரிவுடன் தான் வர்த்தகம் ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் இருந்து வரும் நிலையில், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 395 புள்ளிகள் சரிந்து 75,744 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 147 புள்ளிகள் சரிந்து 22,828 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, HCL டெக்னாலஜி, மற்றும் ICICI வங்கி ஆகிய பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் உள்ளன. மேலும், TCS, ஸ்டேட் வங்கி, மாருதி, பாரதி ஏர்டெல், HDFC வங்கி, பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், டைட்டான், டெக் மகேந்திரா, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, டாடா ஸ்டீல், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva