வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
இந்த வாரம் திங்கட்கிழமை முதல் வரிசையாக நான்கு நாட்கள் பங்கு சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஏராளமான நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 265 புள்ளிகள் சார்ந்து 77,310 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 100 புள்ளிகள் சரிந்து 23,413 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் விப்ரோ, இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜி, சிப்லா, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. மேலும் எச்டிஎப்சி, வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல், இந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், பிரிட்டானியா, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்துள்ளதால், அடுத்த வாரம் முதல் பங்குச்சந்தை படிப்படியாக உயரும் என்ற நம்பிக்கை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Edited by Siva