நேற்றைய உயர்வுக்கு பின் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
இந்திய பங்குச்சந்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை மிகவும் மோசமாக சரிந்த நிலையில், நேற்று சுமாரான உயர்வு காரணமாக முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவதால், இந்திய பங்குச்சந்தை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று காலை, பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஆரம்பமே குறைவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 179 புள்ளிகள் குறைந்து, 78,016 புள்ளிகளில் வர்த்தகமாகி உள்ளது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 51 புள்ளிகள் குறைந்து, 23,657 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளன. அதே சமயம், டிசிஎஸ், சிப்லா, ஹீரோ மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், டாட்டா ஸ்டீல், இண்டஸ் இண்ட் வங்கி, ஸ்டேட் வங்கி, மற்றும் சன் பார்மா போன்ற பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் என்பதால், புதிதாக முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் தங்களுக்கு தகுந்த ஆலோசனைகளை பெற்ற பிறகே முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva