புத்தாண்டு முதல் பங்குச்சந்தைக்கு நல்ல காலமா? இரண்டாம் நாளில் உயர்வு..!
நேற்று புத்தாண்டு தினத்தில் பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. இதனால், 2025 ஆம் ஆண்டு ஆரம்பமே நன்றாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 846 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், அதேபோல் ஆசியன் பெயிண்ட், ஸ்டேட் வங்கி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பங்குச்சந்தை உயர்ந்து வருவது, முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva