நேற்றைய ஏற்றத்திற்கு இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் சுமார் 150 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 539 என்ற புள்ளைகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 45 புள்ளிகள் சரிந்து 17510 இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் புதிய முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலில் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே முதலீடு செய்தவர்களும் தங்களது முதலீடுகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva