Daily Horoscope

60 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:07 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 
இந்நிலையில் இன்று காலை மீண்டும் சுமார் 250 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததை அடுத்து 59 ஆயிரத்தை சென்செக்ஸ் நெருங்கி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் 60 ஆயிரத்தை தொட்டு விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 60 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 17 ஆயிரத்து 500க்கும் மேல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல மாலையும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 462 புள்ளிகள் உயர்ந்து, 59,031 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126 புள்ளிகள் அதிகரித்து 17,590 புள்ளிகளாக உள்ளது.
 
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments