பட்ஜெட்டை தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை புள்ளிகள்! – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
மும்பை பங்குசந்தை புள்ளிகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குசந்தை வர்த்தகம் வீழ்ச்சியை கண்டு வந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 63 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்நிலையில் நேற்று முதலாக பங்குசந்தை புள்ளிகள் உயரத் தொடங்கியுள்ளது.
இன்று பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் 512 புள்ளிகள் உயர்ந்து 59,375 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. அதுபோல தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 17,725 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.