பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும்: எப்படி தெரியுமா?

செவ்வாய், 23 மார்ச் 2021 (16:02 IST)
சமீப காலமாக விண்ணை முட்டி வந்த பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. 

 
கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதன் காரணமாக மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியிருக்கிறது. 
 
கடந்த 10 -14 நாட்களில், கிட்டத்தட்ட 10% அளவுக்கு விலை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் உள்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைவை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
 
இதற்கு முன்னர் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

எல்லாம் காட்டு

அமைச்சரவையில் காங்கிரஸ்!. அழைப்புவிடுத்த தவெக!.. கிரிஷ் சோடங்கர் பேட்டி...

ஜீரோ ஊழல்!.. ஜீரோ கமிஷன்!.. தலைவர் சொல்லிட்டாரு!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி!..

வீட்டிலிருந்து கோட்டைக்கு 17 கி.மீ!.. டிராப்பிக்கில் தவிக்கும் சாமானியர்கள்!.. வீடு மாறுவாரா விஜய்?...

டில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்!.. திருமணமான பெண் பேருந்தில் பாலியல் வன்கொடுமை!..

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலி.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு.. தேர்தல் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments