Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டுமொத்தமாய் 1,054 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 2 மார்ச் 2022 (13:17 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,054 புள்ளிகள் சரிந்து 55,192 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

 
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஏராளமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உள்ள அனைத்து பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்து 54,041 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதே போல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 16,203-க்கு வர்த்தமானது.
 
இதனைத்தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,054 புள்ளிகள் சரிந்து 55,192 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 265 புள்ளிகள் சரிந்து 16,527-க்கு வர்த்தகமாகிறது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments