தங்கத்தின் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?
ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,625க்கும், சவரன் ரூ.37,000க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.76க்கும் விற்பனை செய்யப்படுகிறது.