Daily Horoscope
✕

ரூ.77000ஐ தாண்டி ரூ.78000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: திங்கள், 1 செப்டம்பர் 2025 (09:49 IST)
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு சவரன் ₹680 உயர்ந்து, ₹78,000-ஐ எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்த தங்கம், இன்று மீண்டும் மிக வேகமாக உயர்ந்திருப்பது நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு கிராம் தங்கம் ₹85 உயர்ந்து ₹9,705-க்கும், ஒரு சவரன் தங்கம் ₹77,640-க்கும் விற்பனையாகிறது. தங்கம் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து, ஒரு கிலோ ₹2,000 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, தங்க முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,620
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை:  9,705
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 76,960
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 77,640
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,494
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,587
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 83,952
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  84,696
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.133.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.136,000.00
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments