Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: புதன், 2 ஏப்ரல் 2025 (10:09 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது என்பதும், நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ₹68,000 என்பதைத் தாண்டியது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தங்கம் போலவே, வெள்ளியின் விலையும் நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
 
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய்   8,510 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்    68,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,283 எனவும் ஒரு சவரன் ரூபாய் 74,264 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

எல்லாம் காட்டு

இது ஒன்னும் புதுசுல்லயே!.. தனுஷ் அரசியலுக்கு வருவது பற்றி திருமா கருத்து!...

5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!

வெளிநாடு செல்ல முயன்ற வீரமணி மகள் தடுத்து நிறுத்தம்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments