Daily Horoscope
✕

ஒரு லட்சத்துக்கும் கீழே போன தங்கத்தின் விலை!.. இன்றைய நிலவரம்...

Updated: செவ்வாய், 17 நவம்பர் 2026 (10:36 IST)
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. அதற்கு முன் சில நாட்களில் தினமும் பத்தாயிரம் உயர்ந்து உயர்ந்து அந்த விலையை தங்கம் எட்டியது.
சில நாட்களுக்கு முன்புவரை தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி சென்றது.

ஆனால் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கடுமையாக சரிவை கண்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,01,560- க்கு விற்பனையாது. வாரத் தொடக்க நாளான நேற்று கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.12,540க்கும், ஒரு சவரனுக்கு 600 குறைந்து ரூ. 1,00,320-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,760-க்கு,  கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

அதேநேரம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுவிட்டதால் தங்கம் வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஜேபி மோர்கன் சேஸ், பாங்க் ஆப் அமெரிக்காவுக்கு சிக்கல்.. பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் தவிப்பு...

இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோபாஷ்டமி பண்டிகை.. கோபூஜை செய்ய சரியான நேரம் எது?

சோனியா காந்தி புத்தக நிகழ்வு.. ராகுல் பக்கத்தில் முதல் வரிசையில் முதல்வர் விஜய்.. ரேவந்த் ரெட்டி, டிகே சிவகுமார் பின்வரிசையில்..

பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் - அகல் விளக்கு உரிமையாளர் கைது

இனிமேல் எல்லா டாஸ்மாக்கிலும் கூலிங் பீர்!.. மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி...

அடுத்த கட்டுரையில்
Show comments