திருமாவளவன் பின்னடைவு: 'பானை' சின்னத்தால் இழப்பா?
தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் முக்கிய தொகுதியாக கருதப்பட்ட சிதம்பரம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பின்னடைவில் உள்ளர்.
முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திருமாவளவன் 4519 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரசேகர் 4504 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்து பானை சின்னத்தில் போட்டியிட்டதால் குறுகிய காலத்தில் அவரால் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்த முடியாமல் போய்விட்டதாக கருதப்படுகிறது
மேலும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய தொகுதியான தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலை பெற்று வருகிறார்