தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை – 8.30 நிலவரம் !

Last Updated: வியாழன், 23 மே 2019 (08:55 IST)
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. பதட்டமான இடங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் முதல் கட்டமாக அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது 8.30 நிலவரப்படி பாஜக 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேக வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :