ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (16:00 IST)

மம்தாவின் கோட்டையை தகர்த்த பாஜக - அதிர்ச்சியில் மம்தா

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் எப்படி இதுநாள் வரை தாமரை மலர முடியவில்லையோ அதேபோலதான் மேற்கு வங்கத்திலும். கடந்த 2014 மக்களவை தேர்தலில் கூட மொத்த 42 தொகுதிகளில் பாஜக வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திரிணாமூல் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பாண்மை காட்டியது. ஆனால் தற்போது தேர்தலில் திரிணாமூல் 22 இடங்களில் முன்னிலை இருக்கிறது. பாஜக 19 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கிறது. இது மேற்கு வங்கத்தில் மம்தாவின் கோட்டை சரிகிறது என்பதற்கான அடையாளமோ என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். மம்தாவுக்கு முன்னர் ஆளும் மாநில கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகள் கூட இவ்வளவு இடத்தை தொட முடியாமல் 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.