மோடி வெற்றி – நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டம் !

Last Modified வியாழன், 23 மே 2019 (15:21 IST)
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி அவர் போட்டியிட்ட வாரனாசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக  கிட்டதட்ட 347 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் மிகக் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளன. இதனால் பாஜக தணிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

இம்முறையும் பிரதமராக மோடியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மோடிக்கும் பாஜகவுக்கும் மோடிக்கும் வாழ்த்துமழைப் பொழிந்து வருகிறார்கள். இந்நிலையில் மோடி போட்டியிட்ட வாரனாசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சற்று முன்னர் அறிவிக்கப்பட்டதை அடுத்து பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்து நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :