1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (12:02 IST)

ஹீரோவாக மாறி உதவிய தமிழக ஆட்டோ ஓட்டுநர்: நெகிழ்ந்துபோன வெளிநாட்டு நபர்கள்

சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்கு வந்த நபர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
 
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நாடெங்கிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
 
அந்த வகையில் பங்களாதேஷில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த தந்தை மகனிடமிருந்து பறக்கும்படையினர் ரூ.98 ஆயிரத்தைக் கைப்பற்றினர். மொழி தெரியாததால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். 
 
பறக்கும் படையினர் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுச் செல்லும்படி தெரிவித்துவிட்டனர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர்களை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து, தனக்கு தெரிந்த பாஷையில் அவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார்.
 
பின்னர் அவர்களை அதிகாரிகளிடம் கூட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் மருத்துவ ஆவணங்களை காண்பித்து நடந்தவற்றை கூறினார். இதையடுத்து அதிகாரிகள் பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். தக்க நேரத்தில் உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு பங்களாதேஷ் நபர்கள் நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர்.