வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (14:23 IST)

’ஷேம்பு ‘வாங்க பணம் கேட்ட மனைவிக்கு அடி உதை ! ’சைக்கோ’கணவர் கைது

அஹமதாபாத்தில் தலைக்குக் குளிக்க தன் கணவனிடம் ஷேம்பு வங்க பணம் கேட்டுள்ளார் ஒரு பெண் ( 42). ஆனால் கணவன் காசு தராமல் தன் மனைவியை அடித்து சுவற்றில் தள்ளிவிட்டு மோதச்செய்துள்ளார். இதனால் படுகாயமடைந்த மனைவி கணவர் மீது விராம்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தலைநகரமான அஹமதாபாத்தில் உள்ள பாவ்லா கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, காவல்நிலையத்தில், ஒரு பெண் தன் கணவர் மீது, புகார் அளித்துள்ளார். 
 
அதில் அவர் கூறியுள்ளதாவது: நான்  ஷாம்பு வாங்க பணம் கேட்டேன், அதற்கு என் கணவர் என்னை தாக்கி சுவற்றில் தள்ளி கொடூரமாக தாக்கினார். அதன்பின்னர் நான் அபாயம் என்ற பெண்கள் அவசர (181) உதவிமையத்துக்கு தொடர்புகொண்டுஇது பற்றி கூறினேன்.
 
அதன் பின்னர் ஒரு பெண் என் வீட்டுக்குக் வந்து என் கணவனிடம் என்னை சரியாக நடத்துமாறு கூறினார். அதற்கு சரியாக முக்கியத்துவம் தராத என் கணவர் என்னை வீட்டை விட்டு வெளியேறு படி கூறினார்.
 
அதனால் நான் விராம்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். 
 
புகார் கொடுத்த பெண்ணின்  கணவர் மத்திய ரயில்வே துறையில் கிளர்க்காக பணிபுரிகிறார் எனப்து குறிப்பிடத்தக்கது.
 
அந்தப் பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் பெண்ணின்  கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.