வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:29 IST)

அதிமுக - திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்ய தடை - ஆட்சியர் உத்தரவு

அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கரூரில் பேருந்து நிலையம் அருகே அதிமுக - காங்கிரஸ் கட்சியினர்  இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சிகளுக்கும் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
மக்களைவைத் தேர்தலையொட்டி இன்று பிரசாரம் செய்ய இறுதிநாள் ஆகையால் அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள் தமிழக மெங்கும் தீவிரமாக வ்சாக்கு சேகரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கருர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணிக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
காரூரில் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையின் போது அதிமுக - திமுக கூட்டணியினர் இடையே மோதல் நடைபெற்றது.
 
மோதலை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பரப்புரை செய்ய தடைவிதிக்கப்பட்டது.
 
பரப்புரை செய்ய ஒரே இடத்தில் அனுமதி கேட்டதால் அதிமுக - திமுக கூட்டணிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது அதிமுக - காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கரூரில் பிரசாரம் செய்ய தடைவிதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
 
அதிமுக - காங்கிரஸ் ஆகிய இருகட்சியினர் இடையே மோதல் போக்கு ஏற்படாமல் இருக்கவே ஆட்சியர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.