வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: தேனி , வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:01 IST)

விஜய் எனக்கு கூட பிறக்காத அண்ணன் அவருடன் எனது அரசியல் பயணம் குறித்து நல்ல செய்தி சொல்கிறேன் - நடிகர் சௌந்திரராஜா!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று  வருகிறது.
 
தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் சுந்தரபாண்டியன், கடைக்குட்டி சிங்கம், பிகில், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகர் சௌந்திரராஜா, தனது தாயுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌந்திரராஜா.
 
எனது ஜனநாயக கடமையை நான் செய்துவிட்டேன்., அரசியல்வாதிகளும் அரசாங்கமும் அவர்களின் கடமைகளை நேர்மையாகவும், தேச பக்தியுடனும் செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
உசிலம்பட்டி பகுதி பெருமளவு வளர்ச்சி பெறவில்லை, அதை பார்க்கும் போது எனக்கு கோபம் மட்டுமே வருகிறது. என் தந்தை முதல் நான் வரை படித்த பள்ளி இன்றும் அப்படியே சிதிலமடைந்த நிலையில் உள்ளது, இதுவே ஒரு எம்எல்ஏ, சேர்மன் வீடு இப்படி இருக்குமா. இதிலேயே தெரிகிறது வளர்ச்சி.
 
எந்த ஊராக இருந்தாலும் கல்வி, மருத்துவம், சுகாதார, விவசாயம், வேலை வாய்ப்பு சரியாக இருந்தாலும் அரசாங்கம், அரசியல்வாதிகள் தேவையில்லை, அதை செய்யவே அரசியல்வாதிகளும் அரசாங்கமும் இருக்கின்றன.,
 
உசிலம்பட்டியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளன, அரசின் செயல்பாடுகள் ஓரளவு மட்டுமே.,
 
விஜய் எனக்கு கூட பிறக்காத அண்ணன், அரசியல் மாற்றம் வேண்டும் என நினைக்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். கூடிய சீக்கிரம் அவருடன் இணைந்து பணியாற்றுவேனா இல்லையா என்ற நல்ல செய்தியை கூடிய விரைவில் சொல்வேன் என்றார்.