ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (18:02 IST)

டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கம் ஏன்? -ராதாரவி விளக்கம்

Radharavi
டப்பிங் யூனியன் தேர்தலில் பிரபல நடிகர்கள் வாக்களித்த நிலையில், மீண்டும் நடிகர் ராதாரவி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024- 2026 ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான. 23 பதவிகளுக்கான  தேர்தல் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது.
 
இந்த தேர்தலில் சங்கத்தின் தற்போதைய தலைவரான நடிகர் ராதாரவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து, ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
 
இச்சங்க தேர்தலில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் நாசர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை பதிவிட்டனர்.
 
இந்த  ஓட்டுகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது.  மொத்தம் 1465 வாக்குகள்  பதிவானதாகவும், இதில்,  ராதாரவிக்கு 662  ஓட்டுகளும்,  ராஜேந்திரனுக்கு 346 ஓட்டுகாளும்,  சற்குணராஜூக்கு 36 வாக்குகளும் பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
 
எனவே இத்தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
சமீபத்தில் டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டார். 5 ஆண்டுகளாக எவர் எந்தப் படத்திற்கும் டப்பிங் பேசாத நிலையில், அவர் நீக்கப்பட்டது குறித்து சமீபத்தில் ராதாரவி கூறியதாவது: டப்பிங் யூனியனில் மஞ்சல் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் அதை புதுப்பித்து வருகிறார்கள். சினமயி அந்த சந்தாவை புதுப்பிக்க தவறியதால் அவர்  நீக்கப்பட்டார். மஞ்சல் நிற அட்டையை வைத்து கொண்டு வெள்ளை நிற அட்டை இருப்பதாக பொய்கூறினார் என்று தெரிவித்தார்.

ராதாரவி மீண்டும் தலைவராகி  உள்ளதால், டப்பிங் சங்கத்தில் பாடகி சின்மயி சேர்க்கப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.