திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (12:08 IST)

வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா கூட தரவில்லை..! உதயநிதி ஸ்டாலின்..!

Udayanithi
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திருச்செந்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கனிமொழி 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
கடந்த டிசம்பர்  மாதம் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பின் போது முதல்வர் களத்திற்கு வந்து தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
நீர் நிலைகள் 300 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு 239 கோடி ரூபாய் மதிப்பில் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் பெரு வெள்ளத்தால் உயிரிழந்த 58 பேருக்கு உடனடியாக நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
 
வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடை உரிமையாளர்களுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணமாக கொடுத்தது தமிழக முதலமைச்சர், ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என்று அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டினார்.

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 145 குடும்பங்களுக்கு 385 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்த்து 2,000 கோடி ரூபாய் அளவிற்கு உதவி தொகை வழங்கியது திராவிட மாடல் அரசு என்றும்  ஆனால், ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.