செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (12:39 IST)

இழுபறியில் தொகுதிப் பங்கீடு..! நேரடியாக களத்தில் இறங்கிய மு.க ஸ்டாலின்..!!

stalin
திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
திமுக கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. கொ.ம.தே.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ், விசிக மற்றும் மதிமுக உடன் தொகுதி உடன்பாடு இன்னும் ட்டப்படவில்லை. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருவதால் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ், வி.சி.க., மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


இந்த ஆலோசனையில் திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.