வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (21:23 IST)

தூத்துக்குடி செல்லும் வைகோ - கனிமொழிக்காகப் பிரச்சாரம் !

திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.

இதில் திமுக கூட்டணியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று திமுக வெளியிட்டது. அதில் திமுக முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழிக்கு தூத்துக்குடியில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து வேட்பாளர்கள் பிரச்சாரம் களைகட்டவுள்ளது. திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்யவுள்ளார். தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரப் பிரச்சனையாக இருந்த வேதாந்தாவின் ஸடெர்லைட் ஆலையை இழுத்து மூடவைத்ததில் வைகோவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மக்களிடம் நல்மதிப்பைப் பெற்றிருக்கும் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அது திமுகவுக்கு மேலும் பலமாக அமையும் என்பதால் வைகோவின் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வைகோ வரும் மார்சி 22 ஆம் தேதி தூத்துக்குடியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.