ஆண்டிப்பட்டி தொகுதியில் மோதும் உடன்பிறப்புகள் ! அண்ணன் திமுக, தம்பி அதிமுக...

dmk
VM| Last Updated: திங்கள், 18 மார்ச் 2019 (21:22 IST)
ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரே குடும்பத்தில் இருந்து அண்ணன் மகாராசன் திமுக சார்பிலும், தம்பி லோகிராசன் அதிமுக சார்பிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
18  சட்ட மன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நேற்று வெளியிட்டன. திமுக சார்பில் எம். மகாராசன் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.  இதில் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளராக ஆ.லோகிராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக வேட்பாளர் மகாராஜனின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். 
 
ஆண்டிபட்டி தொகுதியில் ஓரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் போட்டியிடுவதால் தேர்தல் களம் இப்போதிருந்தே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
 
ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் விபரம்
 
பெயர் : ஆ.லோகிராஜன்
தந்தை : ஆங்கத்தேவர்
வயது. 60
தொழில் : அரசு ஒப்பந்ததாரர், டிரான்ஸ்போர்ட் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்.
 
குடும்பம் :  கயல்விழி (மனைவி)
 டிசோர்பவன் (மகன்)
ஹரீஷ்மா (மகள்)
 
அரசியல் அனுபவம்: 
 1986ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர்.
 1987-ல் முத்தனம் பட்டி கிளை செயலாளர்.
 
2002-2007 வரை ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக செயலாளர்.
 
2001-2006 வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்.
 
2018 முதல்  தற்போது வரை முத்தனம் பட்டி கிளை செயலாளர் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளராக உள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :