வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (08:27 IST)

தன் வாயால் கெட்ட ஜெயக்குமார் – தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த திமுக !

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக் கேட்ட பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளித்த அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதில் ‘திமுக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆனால் திமுக அறிக்கை அரைவேக்காட்டுத்தனமாகவும் உதவாக்கரையாகவும் உள்ளது. நாங்கள் தமிழை ஆட்சிமொழியாக அறிவிப்போம் என அறிவித்தால் அவர்கள் தமிழை இணைமொழியாக அறிவிப்போம் என துரோகம் செய்கிறார்கள். எங்களுக்கு வாக்கு அளித்தால் மாதம் தோறும் ரூ 1500 கிடைக்கும் (அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கியத் திட்டம் ) என்பதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’ எனக் கூறினார்.

ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு தேர்தல் விதிகளை மீறுவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக திமுக சார்பில் ‘திமுகவுக்கு வாக்களித்தால் மாதம் 1,500 ரூபாய் தருவோம் என்று ஓர் அமைச்சரே பேசியிருப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்லாமல் தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.