1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (22:35 IST)

மனிதர்களின் பணிவுக்கு இலக்கணம் இது …

இந்தப்பூமியில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் எந்த அற்புதமும் அதிசயமும் தானாக நடக்கவில்லை; எல்லாம் நமக்கு முன்னோரின் அயராத முயற்சி மற்றும் உழைப்பினால்தான் இது சாத்தியமானதென்றால் மிகையில்லை.

மகாபாரதக் காலத்தில் குருஷேத்திர யுத்தத்தில் தன் சொந்தச் சகோதரர்களுக்கு எதிராகப் போரிடத் தயங்கி நின்றுகொண்டிருந்த விஜயனுக்கு தைரியமூட்டி விஷவரூபமெடுத்துத் தன் அனுபவத்தை கூறிய கண்ணனால் கீதை உயதமானது. அர்ஜூனனுக்கு அதே தயக்கம் நீண்டிருக்குமாயின் பாண்டவர்களின் கதியென்னாவாகியிருக்கும்? இத்தனைக்கும் கண்ணன் எந்த ஆயுதத்தையும் தாங்கிப் போரிடமாட்டேன் என்று கூறித் தன் மைத்துனனாகிய அர்ஜூனக்கு தேரோட்டித் தனது தனது பெருங்குணத்தை உலகிற்கு அடையாளம்காட்டியது மொத்த மனிதகுலமும் உற்றுநோக்கத்தக்கது.

உலகப்போரின்போது, பிரிட்டன் அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது தளபதி மற்றும் போர்வீரர்களுடன் இணைந்து போர்களத்தில் நின்றுபோரிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு ராணுவ அதிகாரி தனது சக வீரர்களிடமே அத்தனைவேலைகளையும் வாங்கிக்கொண்டிருந்ததார். இதைக் கவனித்த வின்ஸ்டன் சர்ச்சின் தான் உயர்ந்த பதவியை வகித்தாலும் அந்த வேலையைச் செய்து, அந்த அதிகாரிக்குத் தாழ்மையென்றால் என்னெவென்பதைத் தன் செயலால் கற்றுக்கொடுத்தார்.

அமெரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் ஐசன்ஹோவர் ஒரு கடைநிலை அதிகாரியாக வேலையில் சேர்ந்து தன் இடையயறாத உழைப்பினால் அத்தேசத்தின் அதிபராகப் பதவியேற்றார். இதற்கான அவர் கடுமையான உழைத்தார். அப்போதும் தன் மேலதிகாரி கொடுக்கும் பணிகளை மிகத்திறமையாகச் செய்வதும் அதிவேகத்தில் செய்து, கோப்புகள் தன் மேஜையில் தேங்காதவாறு பார்த்துக் கொண்டார். நாள்பட அந்த வேலைகளில் அதிக நிபுணத்துவம்பெற்றவராக மாறினார். அதுவே அவர் அதிபரானதும் அப்பதவியின்போது மேற்கொண்ட பிரச்சனைகளையும்  சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்க அவர் முன்னர் பெற்ற அனுபவங்களும் படிப்பினைகளும் கைக்கொடுத்தது.

என்றும் எந்த நிலையில் எந்த இடத்தில் நாமெப்படி இருக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. காலத்திற்கேற்ப நேரத்திற்கேற்ப நம்மால் நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நன்மைபயக்குமாயின் ’’ரோமிலிருந்தால் ரோமானியராக’’ இருப்பதில் எந்தத்தவறுமில்லை.

ஆனால் பணிவுக்கும், அடிமையாகும் நிறைய வித்தியாசமுள்ளது. தன்னம்பிக்கையுள்ளவர்கள் பணிவை எப்போதும் தனது ஆடையாக அணிந்திருப்பர். தலைக்கணம் மிகுந்தோர் அதிகாரத்தைக் கையிலெடுத்து அதீத பயத்தால் அடுத்தவர்களை அடிமைப்படுத்த நினைப்பார்கள் என்பது என் கருத்து.

அதனால் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நாம் விட்டுக்கொடுத்துப் போவதில் தவறில்லை. அதனால் மனநிறைவான அமைதி கிடைக்கும்!

சினோஜ்