தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?
முடி உதிர்தல் இன்று அதிகரித்து வரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு. முடி ஆரோக்கியமாக வளர உணவில் தேவையான வைட்டமின்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்
வைட்டமின் D: முடி வேர்களை உறுதியாக வைத்திருக்கவும், புதிய முடி வளரச்செய்யவும் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் E: வைட்டமின் E ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகும். இது முடியை ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வெளிப்புற மாசு காரணமாக ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
வைட்டமின் C: முடியை வலுப்படுத்த தேவையான கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் C உதவுகிறது.
இரும்புச்சத்து: உடலில் ஆக்சிஜனை குறைபாடு ஏற்படும்போது முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான தலைமுடியை பெறலாம்.
Edited by Mahendran