1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. There are so many amazing health benefits in Mookirattai keerai...?

மூக்கிரட்டை கீரையில் இத்தனை அற்புத ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா...?

மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம். 
இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக்கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 
 
மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும். மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.
 
மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும். 
 
கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது. 
 
மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். 
 
உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாக காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டுகாய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து  குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கேரட்டில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா...?