1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (20:15 IST)

ஆன்லைனில் ஃபுல், தியேட்டர் காலி: விஜய் ரசிகர்களின் தந்திரம்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒரு பக்கம் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக ஆன்லைன் டிராக்கர்கள் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் போதுமான பார்வையாளர்கள் இல்லாததால் காட்சிகள் ரத்து என்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் எந்த செய்தி உண்மை என்று புரியாமல் நடுநிலை ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் 
 
இந்த நிலையில் தற்போது ஒரு புதுவிதமான தந்திரத்தை விஜய் ரசிகர்கள் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது பிகில் படத்திற்கு கூட்டம் வரவில்லை என அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வதை தவிர்ப்பதற்காக முன்னணி திரையரங்குகளில் வேண்டுமென்றே தங்களது சொந்த பணத்தை வைத்து ஆன்லைனில் படத்திற்கான டிக்கெட்டுக்களை புக் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் புக் செய்த டிக்கெட்டுகளுக்கு படம் பார்க்க செல்வது இல்லை
 
இதனால் ஆன்லைனில் ஃபுல் என்று காண்பித்தாலும் தியேட்டர்கள் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. காட்சிகள் ரத்தானால் பணம் வந்துவிடும் இல்லையேல் பணம் நஷ்டம் தான். இருப்பினும், அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதை தவிர்ப்பதற்காக தங்கள் சொந்தக் காசை செலவு செய்து வருவதாக விஜய் ரசிகர்கள் வட்டாரங்களில் கூறப்படுகிறது 
 
இதுவும் எத்தனை நாளைக்கு செய்ய முடியும்? அப்படியே செய்தாலும் இதனால் விஜய் ரசிகர்களுக்கு என்ன பயன்? என்ற கேள்வி எழுகிறது. மொத்தத்தில் பிகில் படத்தை வெற்றிப்படம் என்பதை நிரூபிக்க விஜய் ரசிகர்கள் போராடி வருகின்றனர் என்பது மட்டும் உண்மை