செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:24 IST)

பிகில் சிங்கபெண்களுடன் குத்தாட்டம் போட்ட மகள் - வீடியோவை பகிர்ந்த ரோபோ ஷங்கர்!

விஜய் - அட்லீ கூட்டணியில் தீபாவளியன்று வெளிவந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது வருகிறது. பெண்களை கவுரப்படுத்தும் வகையில் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி வெளிவந்திருந்த இப்படத்தில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் கால்பந்தாட்ட வீராங்கனையாக  நடித்திருந்தார். 
ட்ரைலரில் அவர் பேசிய வசனம் ஒன்று ரசிகர்களை கண்கலங்க செய்தது. அதை பார்த்து ரோம்போ சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிகில்  ட்ரைலரில் என் மகளை பார்த்து கண்கலங்கி விட்டேன் என் மகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அட்லீ சாருக்கும் விஜய் சாருக்கும் நன்றி" என தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் உங்கள்  மகள் உங்களுக்கு பெருமை சேர்த்துவிட்டாள் அண்ணா என புகழ்ந்து பாராட்டினார். 
 
இந்நிலையில் தற்போது தனது மகள்,  பிகில் படத்தில் நடித்திருந்த கால்பந்தாட்ட வீராங்கனைகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை நடிகர் ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ இணையதள வாசிகளிடையே செம்ம வைரலாகி வருகிறது.