கமல் அழைத்தும் முடியாது என்று கூறிய ராஜ்கிரண்
நடிகர் ராஜ்கிரண் மீது எப்போதுமே ஒரு தனி இமேஜ் ரசிகர்கள் மத்தியில் உண்டு. பணத்துக்காக விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் போல்டாக கூறியது, இலங்கை பிரச்சனை என்பது ஒரு உலக பிரச்சனை என்று கூறியது, அஜித்தின் குணம் குறித்து கூறியது ஆகியவை சமீபத்தில் வைரலான விஷயங்கள்
இந்த நிலையில் அவர் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல டிவி ராஜ்கிரணுக்கு அழைப்பு விடுத்ததாம். ஆனால் எனக்கு கோடி பெரிதல்ல, கொள்கைதான் பெரியது என்று கூறி அந்த நிகழ்ச்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்
கமல்ஹாசனே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடியாது என்று போல்டாக கூறிய ராஜ்கிரணை நினைத்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.