காதல் பிரேக் அப் வதந்தியை படித்து ரசித்த ப்ரியா பவானிசங்கர்
காதல் பிரேக் அப் வதந்தியை படித்து ரசித்த ப்ரியா பவானிசங்கர்
தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி அதன்பின் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு புரமோஷன் ஆன நடிகை ப்ரியா பவானிசங்கர், மேயாத மான்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தற்போது ’இந்தியன் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது கல்லூரி கால நண்பரான ராஜவேல் என்பவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவு செய்ததை அடுத்து இந்த காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது
ஆனால் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பதிவு செய்த ஒரு நீண்ட பதிவில் அவரது காதல் பிரேக் அப் ஆனது போல் சில வார்த்தைகள் இருந்ததால் இதனை வைத்து பிரியா பவானி சங்கர் தனது காதலனிடம் இருந்து பிரிந்து விட்டதாக வதந்தி கிளம்பியது
ஆனால் பிரியா பவானி சங்கர் காதல் பிரேக் அப் ஆகவில்லை என்றும் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக உள்ளதாகவும் பிரிய பவனி சங்கர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது காதல் பிரேக் அப் குறித்த வதந்திகளையும் கிசுகிசுக்களையும் படித்து, தான் மிகவும் ரசித்து வருவதாக ப்ரியா பவனி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது