திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 மே 2020 (18:59 IST)

அம்மாவின் முன்னிலையில் காதலன் யார் என்பதை வெளிப்படுத்திய டாப்ஸி!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவாகி வரும் டாப்ஸி தனது காதலர் என்பதை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த தப்பாட் திரைப்படம் மிகப் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது காதலன் யார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவரின் தாயாரின் முன்னால் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்யாஸ் போயே என்பவரை காதலிப்பதை ஒப்புக்கொண்டார். மேலும் தனது காதலை சகோதரி மற்றும் தாயார் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனால் பயன் இல்லை எனக் கூறினார். மேலும் டாப்ஸியின் தாயார் அவரை முழுமையாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.