திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (14:07 IST)

"சீரியல் நடிகை சினிமா நடிகையானால் இப்படித்தான் நடக்கும்" அலம்பல் தாங்க முடியல தாயி..!

கடந்த சில நாட்களாகவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் சினிமாவில் நுழைந்து டாப் நடிகைகளாக வலம் வர துவங்கியுள்ளனர். இந்த ட்ரெண்ட் இப்போது அதிகரித்து வரும் நிலையில். பிரபல சீரியல் ஒன்றில் அந்த குடும்ப குத்து விளக்கு நடிகைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். இதனால் படுபேமஸ் ஆன அந்த நடிகைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது, சும்மா விடுவாரா அம்மணி. 
உடனே ஓகே சொல்லிவிட்டு அதற்கான வேளைகளில் படுமும்முரமாக இறங்கினர். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். அதுமட்டும் என்றால் கூட பொறுத்துக்கொள்வார்கள். ஆனால்,  சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிற்கு கவர்ச்சி உடையணிந்து வந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு பந்தா காட்ட ஆரம்பித்தார். 
 
இதனை கண்ட ரசிகர்கள் ஆத்தி... இன்னும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை அதுக்குள்ள இப்படி ஒரு அம்பலா என புலம்பி வருகின்றனர். இன்னும் படம் நடித்து ஹிட் ஆகிவிட்டால் கையிலே பிடிக்கமுடியாது போல என முணுமுணுத்து வருகின்றனர்.