1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (22:28 IST)

விவாகரத்து ஆன முன்னாள் மனைவியுடன் மீண்டும் டேட்டிங் செல்லும் நடிகர்

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக மனைவி சூசனை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இருவரும் மாறி மாறி குழந்தைகளை கவனித்து வருகின்றனர்.



 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விவாகரத்து ஆன முன்னாள் மனைவி சூசனுடன் ஹிருத்திக் ரோஷன் டேட்டிங் சென்று வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடு சென்றபோது கூட சூசன் மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி விவாகரத்து பெற்ற பின்னர் வாடகை வீட்டில் தங்கியிருந்த சூசனுக்கு ஹிருத்திக் ரோஷன் மும்பையில் உள்ள ஜூஹீ பகுதியில் சொந்தமாக ஒரு வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளாராம். எப்படியோ மீண்டும் இணைந்து நல்லது நடந்தால் சரி என்று இருவீட்டார்களும் இதை கண்டுகொள்ளமல் இருப்பதாக கூறப்படுகிறது.