வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Murugan
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (15:19 IST)

காதலன் நெருக்கடி..அதிரடி முடிவெடுத்த நம்பர் ஒன் நடிகை...

தன்னிடம் பல வருடங்களாக உதவியாளராக இருப்பவரை, நம்பர் ஒன் நடிகை  கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


 

 
அவரும், அவரின் உதவியாளரும் சினிமா உலகில் சகோதரன், சகோதரி போல் வலம் வந்தவர்கள். அவரின் மீது கொண்ட பாசம் காரணமாக, தான் கலெக்டராக நடிக்கும் படத்திற்கு அவரையே தயாரிப்பாளர் ஆக்கினார் நடிகை. 
 
அப்படியே அடுத்தடுத்த படங்கள், காசு, பணம், கார், பங்களா என கனவு கண்டு கொண்டிருந்த அவரின் கனவுக்கு ஆப்பு வைத்து விட்டாராம் நடிகையின் காதலரான சிவ இயக்குனர்.தற்போது நடிகையின் எல்லா விவகாரங்களிலும் தலையிட்டு வரும் அவர், பல வருடங்களாக உடன் இருந்த  உதவியாளரை நீக்க சொல்லி விட்டாராம். நடிகையும் அதற்கு ஓகே சொல்லி விட்டது போல் தெரிகிறது. 
 
இதனால் தனது ஆசையில் மண்ணைப் போட்ட நடிகையின் காதலனை திட்டிக் கொண்டும், தனக்கு தெரிந்தவர்களிடம் புலம்பிக் கொண்டும், கோடம்பாக்கத்தை வலம் வருகிறாராம் அந்த உதவியாளர்.