ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனை!
சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
ஆம், ரெட்மி நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல் ஸ்மாட்போன்கள் ரெட்மி நோட் 11 சீரிசில் அறிமுகமானது. இதன விற்பனை சீனாவில் துவங்கிய நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிக ஸ்மார்ட்போன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது.
மேலும் டபுள் 11 விற்பனை துவங்கியதும் சுமார் 1 நிமிடம் 45 நொடிகளில் 2 பில்லியன் யுவான்களுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை ரெட்மி விற்பனை செய்தது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.