திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (10:53 IST)

வீரமரணம் அடைத்த தமிழக ராணுவ வீரர்கள்; நிதியுதவி வழங்கிய மு.க.ஸ்டாலின்!

தேச பாதுகாப்பிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

இந்திய பாதுகாப்பிற்காக நாட்டு எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் பலர் பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

அவ்வாறாக சமீபத்தில் பல்வேறு காரணங்களால் ராணுவ பணியில் இருந்தபோது உயிர்நீத்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் நால்வரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.