புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (16:53 IST)

செல்போனுக்கு வயர் இல்லாமல் சார்ஜர்.. அசரவைக்கும் தொழில்நுட்பம்..சியோமி சாதனை

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் வசிக்கும் நாம் செல்போன், உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களினால் அன்றாடமும் கழிந்துபோகிறது. எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் தொழிலபதிபர்கள் இந்த தொழில்நுட்பத்தை மக்களுக்குச் சாதமாக எப்படி மாற்றுவது என்று பெரும் தொகையை இத்தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்காகவே பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் அத்தியாவசியப் பொருளாகவே மாறிவிட்ட செல்போனுக்கு வயர் இல்லாமல் சார்ஜ் செய்யகூடிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சந்தையின் முன்னணியில் உள்ள சியோமி நிறுவனம் வயல் சார்ஜர் இல்லாமல் சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த டிவைஸ் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 5 சாட் அளவுக்கு மின்சாரம் வழங்குகின்ற திறனுள்ளதாகவும் கூறப்படுகிறது.