வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (19:22 IST)

11.59-க்கு முடியும் வாட்ஸ் அப் கதை... பயனர்கள் ஷாக்!!

குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது என வாட்ஸ் நிறுவனமே அறிவித்துள்ளது.  
 
வாட்ஸ் ஆப்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரான அறிவிப்பில் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விரைவில் பல லட்சம் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்படி 2020, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஐ.ஒ.எஸ். 8 மற்றும் அதற்கு முன் வெளியான இயங்குதளங்களில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது.
 
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 2.3.7 மற்றும் அதற்கும் முந்தைய பதிப்புகளில் வாட்ஸ் அப் செயலி இயங்காது. எனினும், வாடிக்கையாளர்கள் இந்த இயங்குதளங்களில் ஜனவரி 31, 2020 நள்ளிரவு 11.59 மணி வரை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.