Daily Horoscope
✕

அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்! – வாட்ஸப் அளிக்கும் புதிய அப்டேட்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 1 ஜூன் 2022 (12:14 IST)
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் தனது செயலியில் எடிட் வசதியையும் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கியமான இடத்தில் வாட்ஸப் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்சப் செயலியில் பல்வேறு வசதிகளும், அப்டேட்களும் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸப்பிலும் ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வாட்ஸப்பில் அனுப்பப்படும் மெசேஜுகளை எடிட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்த வாட்ஸப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான சோதனைகள் நடந்து வருவதாகவும் விரைவில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப்பிலும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

வெற்றி பயணம் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.. ஆனால் இதை செய்து கொடுங்க: தனியார் பேருந்து உரிமையாளர்கள்..

இடைத்தேர்தலில் வெற்றி!. உடனே அன்புமணிக்கு போட்ட முதல்வர் விஜய்!...

ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments