ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:50 IST)

'' வாட்ஸ் ஆப்''பில் புதிய வசதி அறிமுகம்..பயனர்கள் மகிழ்ச்சி

whats app
இன்றைய தொழில் நுட்ப காலத்தில் கையடக்க செல்போன் இருந்தால் போதும் உலகில் நடப்பதை எல்லாம் அறிந்துகொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில் செல்போன்  வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய  ஆப்பாக  வாட்ஸ் ஆப் உள்ளது.

காலத்திற்கு ஏற்ப பல சிறனந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப்    நிறுவனம் எடுத்து வரு கிறது.

அந்த  வகையில் இனி அதிகபட்சமாக  குரூப் கால் பேசும்போது, 32 பேருடன் குரூப்  கால் பேசலாம் என வாஸ்ட் ஆப் வலைதளத்தின் தகவல்  FAQ என்ற பக்கத்தில் இடம் பெறுள்ளது.

முன்னதாக 4 பேரும் வாய்ஸ் கால் பேசலாம் என்ற நிலையில், 2020 ஆம் ஆண்டில் இது அதிகரிக்கப்பட்டது. இந்த அம்சம் 2.22.8.80 வெர்சனிலும்,2.2.9.73 வெர்சனிலும் வழங்கப்பட்டுள்ளது.

இனி அதிகபட்சமாக ஒரே நேரத்தில் குரூப் காலில் 32 பேருடன் வாய்ஸ் கால்  பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  வாஸ்ட் ஆப் வலைதள   வீடியோ காலுக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை.  மேலும்  ஸ்டேட்டஸிலும் புதிய ஆப்சன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.