1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயலா? வாட்ஸ் அப்பில் புகார் அளிக்க எண் அறிவிப்பு!

periyasamy
தமிழக கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்கள் செய்பவர்களின் குறித்த புகார்களை வாட்ஸ்அப் எண் மூலம் அளிக்கலாம் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது நியாய விலை கடை அரிசி கடத்தல் ஈடுபடுதல் பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் பாலியல் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் 
 
இது குறித்து புகார் அளிக்க விரும்புவோர் கூட்டுறவு சங்க பதிவாளர் 9884000845 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் 
 
கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்கலாம் என்ற வசதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது