செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (14:39 IST)

மிக குறைந்த விலையில் நோக்கியா சி12 ப்ளஸ்! – சிறப்பம்சங்கள் என்ன?

Nokia C12 Plus
அனைத்து தரப்பினர் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் நோக்கியா பட்ஜெட் விலையில் சி12 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஃபோன்கள் விற்பனையில் பல காலமாக முன்னணியில் இருந்த நிறுவனம் நோக்கியா. தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் பல மாடல்களை நோக்கியா அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்கிடையே சாதாரண மக்களும் வாங்கும் விதமாக குறைந்த விலையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய நோக்கியா சி12 ப்ளஸ் என்ற மாடலை நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா C12 பிளஸ் மொபைல் இன்று (3 ஏப்ரல் 2023 அன்று) அறிமுகப்படுத்தப்பட்டது. 720x1520 பிக்சல்கள் (HD+) தரம் கொண்ட 6.30-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் இந்த ஃபோன் வருகிறது. நோக்கியா சி12 பிளஸ் 1.6 மெகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 2ஜிபி ரேம் உடன் வருகிறது. நோக்கியா சி12 பிளஸ் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) உடன் இயங்குகிறது மற்றும் 4000எம்ஏஎச் கழற்றி மாட்டக்கூடிய ரிமூவபிள் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களைப் பொறுத்த வரையில், நோக்கியா சி12 பிளஸ் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்கான ஒற்றை முன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

நோக்கியா சி12 பிளஸ் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) அடிப்படையிலானது மற்றும் 32ஜிபி இண்டெர்னல் மெமரியைக் கொண்டுள்ளது.  Nokia C12 Plus இல் சிறப்பம்சங்களாக Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.20 மற்றும் Micro-USB ஆகியவை உள்ளது. நோக்கியா சி12 பிளஸ் ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

2ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி என்ற அடிப்படை அம்சத்துடன் அனைத்து தரப்பினர் பயன்பாட்டிற்கும் உதவும் வகையில் வெளியாகியுள்ள இந்த Nokia C12 Plus –ன் விலை ரூ.7,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K