வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (13:05 IST)

இவ்ளோ கம்மி ரேட்ல ஸ்மார்ட்போனா? – Moto E13 சிறப்பம்சங்கள் என்ன?

Moto E13
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய வரவான மோட்டோ ஈ13 (Moto E13) ஸ்மார்ட்போன் ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பட்டன் ஃபோன் காலத்திலிருந்தே பிரபலமாக இருந்து வரும் நிறுவனம் மோட்டோரோலா. தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் தொடர்ந்து வளர்ந்து வரும் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ரக ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நாளை (பிப்ரவரி 15) வெளியாக உள்ள புதிய ஸ்மார்ட்போனான Moto E13 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் குறைந்த விலையில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு தேவையான அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Moto E13 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
  • 3 Sim மாட்டக்கூடிய வசதி (2 நானோ சிம் + 1 மைக்ரோ சிம்)
  • ஆக்டாகோர் ப்ராஸசர், Unisoc T606 சிப் செட், மாலி G57 கிராபிக்ஸ்
  • ஆண்ட்ராய்டு 13 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் கோ யூஐ
  • 2ஜிபி/ 4 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டெர்னல் மெமரி (1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்)
  • 13 எம்.பி சிங்கிள் வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா,
  • 5000 mAh பேட்டரி, 10W Charging, யூஎஸ்பி டைப்-சி
  • 4ஜி,3ஜி, ப்ளூடூத், வைஃபை, ஹாட்ஸ்பாட், FM Radio,

இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளாக், அரோரா க்ரீன், க்ரீமி வொயிட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

Moto E13 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.6,999-க்கும், 4ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.7,999-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை லைவ் விற்பனை தொடங்கும் நிலையில் இந்த மோட்டோ ஈ13 ஸ்மார்ட்போனை மோட்டோரோலா இணையதளம், ஜியோ மார்ட் மற்றும் ப்ளிப்கார் ஆகிய தளங்களில் வாங்க முடியும்.

Edit by Prasanth.K